PRESS HERE 🖤
The MOON Belongs To👑SOWNTHARYA

Happy Birthday Sowndhu👑!

My Dearest One, My Heart's Poetry

FOR YOU

Happy Birthday Coffee Lover. I don't Love Coffee before I saw you but now I am love NOT A COFFEE.

You were my Favorite Distraction in the middle of the boring lectures

I still hope that one day we both will look at the moon together.

Your Beautiful Journey Through Time

0 Years
0 Months
0 Days
0 Hours
0 Minutes
0 Seconds

என் இதயத்தின் பிறந்தநாள் வாழ்த்து

✨மலரினம் சேராத மலர் ஒன்று 🌺

✨மண்ணில் மங்கையாய் பூத்த நாளின்று🌏

✨ வானம் சேராத நிலவொன்று🌙

✨ உதித்த நாள் இன்று

✨உன் பிறந்த நாளை பார்த்து மற்ற நாட்களெல்லாம் ஏக்கம் கொள்கின்றன உன் பிறந்த நாளில் பிறந்திருக்கலாம் என்று❤️😌

காத்திருந்தேன் நீ என்னை கடந்துச் செல்லும் அந்த ஒரு நொடிக்காக !

என்னை மதித்த உண்மை நீ...✨

என் தாய்க்கு பிறகு நான் மதித்த முதல் பெண் நீ...✨

நான் உணர்ந்த முதல் ✨ கவிதை நீ...✨

✨ஏனோ உன்னை பார்த்தேன் தெரியவில்லை, பிறகு

என்னுள் உன்னை பார்த்தேன் புரியவில்லை✨

✨பேசவே யோசிக்கும் நீ பேசியதை மட்டுமே யோசிக்கும் நான்!

காத்திருக்கிறேன் நீ உன் மௌனம் கலைத்து பேசும் கவிதைக்காக !

✨கண்களில் வாள் வீசி என் மனம் கிழித்த நீ ⚔️

காயத்தில் மருந்தளிக்க உனை தேடி நான் 🩸

✨உடைந்த என்னை மொத்தமும் அள்ளி கொண்டு

✨உன்னிடமே வருகிறேன் 💫

💫உன்னை தவிர

வேறு யாரால்

✨என்னை ஒட்டி சேர்க்க முடியும்...💫

✨உணர்வுகளை நேசிக்கிறேன்!

✨ உயிராய் சுவாசிக்கிறேன்!!

✨எனக்குள்ளே உன் மூச்சு

✨எதற்காக என் மூச்சு

✨அடி மௌனம் வேண்டாம் கண்மணியே ஒரு வார்த்தை பேசிவிடு !!

நான் எனக்குள் இல்லை தொலைத்துவிட்டேன் நீ என்னை மீட்டுக்கொடு!!!

✨என்னவோ என்வசம் நான் இல்லை ,

✨ என்ன நான் சொல்வது என்னிடம் வார்த்தை இல்லை!!

காத்திருப்பேன் உன் நினைவோடும் என் கவிதையோடும் !

உன்னை காணும் ஒவ்வொருநாளும் எனக்கு பிறந்தநாள்தான் ,

ஏனென்றால் ஒவ்வொருமுறை உன்னை நான் பார்க்கும்போதும் நீ என்னிடம் பேசாமல் போவதால் இறந்து பிறக்கிறேன் ✨அம்மா

காத்திருந்தேன் நீ என்னை கடந்துச் செல்லும் அந்த ஒரு நொடிக்காக !

காத்திருக்கிறேன் நீ உன் மௌனம் கலைத்து பேசும் கவிதைக்காக !

காத்திருப்பேன் உன் நினைவோடும் என் கவிதையோடும் !

உன் விழிகளால் விழித்தாலும்

உன் விழிகளில் விழித்தாலும்

என் விழிகள் விக்கித்து போகின்றன

என் மனம் திகைத்து போகின்றன...🫠

✨மீண்டும் வருமா அந்த நாட்கள்??🍁

✨நீ முதல் முதலில் எனக்கு அறிமுகமான நாள்🍁

✨நான் என் கவலைகளை மறந்து உன்னோடு கதைத்த நாட்கள்..🍁

✨ குருஞ்செய்திக்காக நான் ஏங்கிய நாட்கள்..

✨உன்னை முதல் முதலில் சந்தித்த படபடப்பு நிறைந்த அந்தநாள்..🍁

✨மீண்டும் வருமா அந்த நாட்கள்??..

மன்னித்துக்கொள்!! உனக்கு என்னிடம் பேச சிறிதும் பிடிக்கவில்லை என தெரிந்தும் எங்கோ உன்னை தொலைத்துவிடுவேனோ! என்ற அச்சத்தில் தான் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்கிறேன்.!!🥺

நீ என்னோடு பேசிய அந்த ஒரு மணி நேர உரையாடலை மனதில் ஒளிப்பதிவு செய்து ஓர் இரவு முழுதும் கேட்கும் எனக்கு தானே தெரியும் காந்தம் கண்களில் மட்டுமல்ல குரலிலும் உள்ளதென்று....!!!

அடிக்கடி பேசமாட்டாய், அதிகமாகவும் பேசமாட்டாய், நீ பேசுவதும் குறைவுதான் பேசும் நேரமும் குறைவுதான். ஆனால், சில வார்த்தைகளுக்காகவும், சில நிமிடங்களுக்காகவும், மனம் தினமும் காத்திருக்கிறது...😌✨